1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் Dr அருள் கணேசலிங்கம் (முன்னாள் சட்டபீட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம், Solicitor- Londo

தாய் மடியில் : 04, Aug 1964 — இறைவன் அடியில் : 21, Mar 2018வெளியீட்ட நாள் : 21, Mar 2018
பிறந்த இடம் - யாழ். மீசாலை
வாழ்ந்த இடம் - யாழ். மீசாலை
திதி : 9 ஏப்ரல் 2018

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள் கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...

உன் வித்தகத்தில் ஊரையும்
உறவையும் வியக்க வைத்துவிட்டு
உன்னுயிரானவர்களை கைவிட்டுச்
சென்றதென்ன?

கட்டியவள் கலங்கி நிற்க - நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்றவர் இருவரும் ஏங்கி நிற்க - நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?

ஒரு பிறையோடு விடிவெள்ளியாய்
வழிகாட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர்தூவி
அஞ்சலி செலுத்துகின்றோம்
தகவல்உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com