5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமநாதர் சின்னத்தம்பி (இராசி)

தாய் மடியில் : 26, Feb 1934 — இறைவன் அடியில் : 16, Mar 2018வெளியீட்ட நாள் : 22, Mar 2018
பிறந்த இடம் - யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் - கொழும்பு, கிளிநொச்சி
திதி : 22 மார்ச் 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் சின்னத்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். தீவகம், கிளிநொச்சி கல்வி வலயங்களில் அதிபராகவும், கோட்டக்கல்வி அதிகாரியாகவும், பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், வலயக்கல்விப் பணிப்பாளராகவும், கூட்டுறவாளராகவும், விசேட ஆணையாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும், ஆலய அறங்காவலராகவும் உன்னத பணிபுரிந்த இராமநாதர் சின்னத்தம்பி அவர்களை இழந்து இன்றோடு ஐந்தாண்டாகிறது.

இந்திய, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கற்றுத்தேறி தான் பெற்ற கல்வியையும், உழைப்பையும் ஈழதேச கிராமியச் சமூக மேம்பாட்டிற்காக நல்கிய அப்பெருந்தகையாளனின் நினைவு தின மோட்ச இறைவழிபாடுகள் 22-03-2018 வியாழக்கிழமை அன்று நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் தேவஸ்தானத்திலும், நினைவேந்தல் கல்விச் சிறப்புப்பேருரை 24-03-2018 சனிக்கிழமை காலை நெடுந்தீவு மகாவித்தியாலய நவரட்ணசிங்கம் பெரு அரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அந்நிகழ்வில் ”கற்பித்தலில் நேர்க்கணிய உத்திகளும் உபாயங்களும்” என்ற தலைப்பில் தேசிய கல்வி நிறுவக பன்முக ஆளுமை கலாநிதி உலகநாதர் நவரட்ணம் அவர்கள் பேருரை வழங்கவுள்ளார்.

"நல்லோர் நெஞ்சங்களில் என்றும் மறையாது
அதிபர் இராசி அவர்களின் நீங்கா நினைவு"
தகவல்நெஞ்சகலா நினைவோடு நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் ஒன்றியம்

தொடர்புகளுக்கு

கணபதிப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94773449678
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com