31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சின்னராசா பராசக்தி

தாய் மடியில் : 10, Jun 1928 — இறைவன் அடியில் : 26, Mar 2018வெளியீட்ட நாள் : 26, Mar 2018
பிறந்த இடம் - யாழ். வேலணை
வாழ்ந்த இடம் - சுவிஸ் Bern

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னராசா பராசக்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்

அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!

ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!

கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகள்.

எங்கள் அம்மாவின் பிரிவுச்செய்தி கேட்டு நேரில் வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அனைத்து வகைகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் சாட்டி அந்தியேட்டி மண்டபத்திலும், 28-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் சபிண்டீகரணமும், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் அன்னாரின் நினைவால் அவரது இல்லத்தில் மதியபோசனம் வழங்கப்படும்.

மேலும் 07-04-2018 சனிக்கிழமை அன்று சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேஸ்வர ஆலய மண்டபத்தில் 41ம் நாள் நினைவால் வழங்கப்படவிருக்கும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.68/82, பணிக்கர் ஒழுங்கை,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com