31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் சின்னம்மா செல்லப்பா

தாய் மடியில் : 16, Jul 1930 — இறைவன் அடியில் : 27, Feb 2018வெளியீட்ட நாள் : 27, Mar 2018
பிறந்த இடம் - யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம் - யாழ். ஆனைக்கோட்டை

யாழ். ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா செல்லப்பா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமக்கு உயிர் தந்த அம்மா! தவிக்கின்றோம் நீங்கள் இன்றி...!

மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீங்கள் இல்லை!

ஆற்றல் இழந்த எம் நிலையை
ஊக்கபடுத்த நீங்கள் இல்லை!

எம் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீங்கள் இல்லை!

காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!

காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!

நாம் உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!

என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-03-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும், ஜெர்மனி Essen இல் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னையின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு உதவிகளைப் புரிந்த அனைத்து உறவினர்கள், நண்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் மருமகன் சீவரத்தினம் குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்சத்தியமூர்த்தி தவமலர்(விஜயா), பேரப்பிள்ளைகள் சிவரூபன், கௌசிகன்

தொடர்புகளுக்கு

— ஜெர்மனி
தொலைபேசி: +49201770756
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com