1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ரூபன் ருகிஷ்ணன் (ருகிஷ் குட்டி)

தாய் மடியில் : 09, May 2012 — இறைவன் அடியில் : 01, Apr 2018வெளியிட்ட நாள் : 02, Apr 2018
பிறந்த இடம் - சுவீடன்
வாழ்ந்த இடம் - சுவீடன்
சுவீடனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் ருகிஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீண்டும் நீ வருவாயா மகனே ருகிஷ்ணா....!

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!

கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!

கருவறையில் இருந்து இறங்கி
கல்லறை நோக்கிச் சென்று
ஓராண்டு ஆனதையா!

நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும் என்று
இறைவனை வேண்டி ஏக்கத்துடன்
எதிர்பார்த்து நிற்கின்றோம் அப்பா அம்மா..!
தகவல்அப்பா, அம்மா
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com