1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பத்மநாதன் மங்களேஸ்வரி

தாய் மடியில் : 28, Jan 1952 — இறைவன் அடியில் : 14, Apr 2017வெளியிட்ட நாள் : 18, Apr 2018
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - கொழும்பு
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சங்கமித்தை மாவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் மங்களேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னைக்கென சமர்ப்பண வரிகள்

உறவென்ற விருட்சம் ஒன்று் உறங்கியது கண்டோம் அம்மா!
பிரிவென்ற பெருந்துயரம் வாட்டுது எம் உளத்தை!

துன்பம் வரும் வேளை எல்லாம் தூணாக நின்றீர்!
துவண்டு நாம் வீழாமல் காத்திருந்தீர்!
வாழ்வினில் எட்டாது வாழ வைத்த தெய்வமே!
வாடி மனம் தவிக்கின்றதே வாழ்ந்து நீங்கள் முடிந்ததனால்!
பாரினில் உமக்கென ஈடான உறவு நாம் பார்ப்பது இனி எப்போ?

இன்னமும் எம் மனக்கண் முன்னே நீங்கள் இனிமையாய் நிற்க
இன்னுயிர் பிரிந்து இமைகளை மூடித் தூங்கியதேனோ?
அகிலத்தில் அவலமுற்று அனாதியாய் நிலை தளர்ந்தோம் அம்மா!
அன்போடு ஆதரித்த அன்னையே ஆசிகள் தாரும் எமக்கு...!

மகிழ்வும் துயரும் பட்ட கணங்கள் மறையாது வாழ
நீர் மட்டும் மறைந்தது ஏனோ எம் அருமை அம்மாவே!
வாழ்ந்தது போதும் என்று நினைத்தோ
காலனின் கட்டளைக்கு கண்ணசைத்து சென்றீர்?

புன்னகை முகத்தோடு பவனி வரும் காட்சி
இன்னமும் உறைந்து இருக்கு எம் மனதோடு!
துயரோடு எமை விட்டு தூரமாய் சென்றீர் அம்மா
நினைவோடு என்றும் நீங்காது வாழ்வோம் நாம்!

நல்ல உள்ளம் ஒன்று இளைப்பாறும் வேளையிலே
நவில்கின்றோம் எம் நன்றிகளை அம்மா!
விழுதோடு விருட்சமாகி உன் நாமம் உயர்வாகும்
பிரிவோடு வாடிடினும் பிரார்த்திக்கின்றோம் ஆத்ம சாந்திக்காய்!

நம் தலைமுறை வேர் நீரே நன்றிகள் கோடி அம்மா!
சமர்ப்பணவரிகள் கோடிகள் உண்டு....!
சாந்திக்காய் எம் பிரார்த்தனை கோடி....!

”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை“ எனும் கருத்தை
நினைவில் கொண்டு அழுத விழிகளுடன்
உம் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுகின்றோம்!

உங்கள் உயிர்தான் பிரிந்திருந்தாலும் அம்மா
உங்கள் நினைவுகள் எமைவிட்டு அகலாது!
என்றும் உங்கள் நினைவுகளால் நிறைந்திருக்கும்
எங்கள் மனம் எம் பாசமிகு அன்னையே!

தெய்வத்தின் திருவுருவே! எம் அன்னைக்கு
நன்றியின் சமர்ப்பணம் இதயத்தால் கோடி!!!

என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அண்ணன், தங்கை, மக்கள்,
மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.

அன்னாரின் முதலாம் ஆண்டு திதி நிர்ணயக்கிரியை 18-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் இல.105, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13 என்னும் முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறும். இந் நிகழ்விலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com