31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அமரர் செல்லத்துரை சோதிப்பெருமாள்

தாய் மடியில் : 19, Aug 1931 — இறைவன் அடியில் : 22, Jun 2018வெளியிட்ட நாள் : 19, Jul 2018
பிறந்த இடம் - யாழ்
வாழ்ந்த இடம் - யாழ்
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சோதிப்பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா அழைத்தாளோ ஐயா!
ஆண்டவனிடம் போவோம் வாருமென்று

இல்லறத்தில் பெற்ற பயன் போதுமென்றோ- நீவீர்
ஈன்ற எம்மை தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்!

உந்தனுக்கு உவமை இல்லை உலகத்திலே ஐயா
ஊர் அறியும் உந்தன் புகழ் உலகை விஞ்சும் என்று
எம் தாயும் சென்று விட்டாள் ஏமாற்றம் தந்து

ஏககாலனுக்கும் ஆசை வந்ததோ உங்கள் கூட வாழ
ஐயா! ஐயா! என இன்று வரை அழுகின்றோம் !

ஒரு போதும் நினைக்கவில்லை
எம்மைத் தவிக்கவிட்டுச் செல்வீர் என்று

ஓங்கு புகழ் ஓங்கி உலகமது மெச்சி நிற்க
ஓளவியம் ஏதுமின்றி அமைதியாய் வாழ்ந்திட்டு
அஃகம் குழைந்து தினம் அழவைத்து சென்றதேனோ!

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

என்ற வாக்கிற்கிணங்க எமது தெய்வம் நோயுற்றிருந்த காலங்களில் சிறந்த வகையில் மருத்துவ சேவையினை வழங்கிய வைத்திய நிபுணர் மகாதேவன் ஏனைய வைத்தியர்கள் மற்றும் யாழ் வைத்தியசாலைக் குழுமத்திற்கும் எமது முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இறுதி நிகழ்வுகளில் பங்கு கொண்ட நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு தேசங்களிலிருந்தும் தொலைபேசி முகப்புத்தகம் ஈ.மெயில் போன்றவற்றினூடாகவும் அனுதாபத்தினை தெரிவித்த பாசமிகு உறவுகளுக்கும், பத்திரிகைகளில் கண்ணீர் அஞ்சலி தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டோர்க்கும், மலர் வளையங்கள் மாலைகளினூடாக அஞ்சலி செலுத்திய உறவுகளுக்கும், இறுதிப்பயணத்தின் போது இரங்கற் கூட்டத்தினை சிறப்புற நடாத்திய பெருந்தகைகளுக்கும், பான்ட் வாத்திய இசையினூடாக தமது இறுதி மரியாதையினை மேற்கொண்ட யாழ். இணுவில் மத்திய கல்லூரிச் சமூகத்திற்கும், அவர் புகழை பத்திரிகையில் கட்டுரையாக வெளிப்படுத்திய பேராசான்களுக்கும், நினைவு மலரிற்கான ஆக்கங்களினைத் தந்துதவிய கல்வியியலாளர்களுக்கும், அதனை அச்சிட்ட எம் உறவுகளுக்கும், சிறந்த முறையில் வெளிக்கொணர்ந்த சோதிமொழி நிறுவனத்திற்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த அன்பான உறவுகள் யாவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
சரஸ்வதி மகால்,
மஞ்சத்தடி தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com