31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் நடராஜா யோகம்மா

தாய் மடியில் : 11, Aug 1930 — இறைவன் அடியில் : 24, Jun 2018வெளியிட்ட நாள் : 23, Jul 2018
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - london
திதி : 24 யூலை 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத் தாயே!

உன் கரம்பிடித்து நடந்த நாட்கள்
நீ தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
இதயத்தின் ஆழத்தில் புதைந்த வேர்களாய்
நித்தம் நித்தம் அலை மோதுதம்மா!

உனை இழந்து மாதமொன்று ஆன போதும்
காலத்தின் கணக்கு தப்பாமல் போன போதும்
ஞாலத்தில் நீ இல்லையென உணர்ந்த போதும்
நெஞ்சில் ஆழத்தில் வாழ்கிறாய் அம்மா
எம் உணர்வோடு நீ கலந்துவிட்டாய் அம்மா!

நீ நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ அம்மா!

அம்மா எங்கள் அன்புத்தாயே
உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
தகவல்பிள்ளைகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com