1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்பழகன்(அன்பு) கனகலிங்கம் (உரிமையாளர்- Betterway, Queensbury)

தாய் மடியில் : 24, Jul 1970 — இறைவன் அடியில் : 28, Aug 2017வெளியிட்ட நாள் : 30, Aug 2018
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - லண்டன் Queensbury
திதி : 4 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பெனும் பெயருக்கேற்ப
அன்பே மேன்மையென கனிவான புன்சிரிப்புடன்
பாசத்தின் ஒளியுருவாய் வாழ்ந்த
எம் உயிரே!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஓராண்டு காலமாகிறதே!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்

கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை
உனைக்காணமாட்டோமென
நம் இதயம் மட்டும் வலிக்கிறது!

உன் நினைவோடு வாழும் உன் குடும்பம்!
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com