நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை மரியம்மா (சிலோன் அன்ரி)

தாய் மடியில் : 03, Sep 1937 — இறைவன் அடியில் : 27, Sep 2018வெளியிட்ட நாள் : 27, Sep 2019
பிறந்த இடம் - யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை மரியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. கண்ணீர்ப்பூக்களால் ஓர் இரங்கல் பா உயிர் தந்த உறவே
உம்மை விட இங்கு எதுதான்
உயர்வோ

உம் பெருமை சொல்ல
கவிதைகளும் கண்ணீர் வடிக்கும்
வார்த்தைகளும் காயம்படும்
எந்த வார்த்தைகளைக்கொண்டும்
எழுதிவிட முடியாது
உங்களுக்கான முற்றுக்கவிதையை!

தாய் என்னும்
மந்திரச் சொல்லில்தான்
சுழல்கிறது இப்பூமி
உம்மைப்பெற்றவளே
உம்மைச்சுமக்கிறாள்

உம் உதிரத்தால் எமக்குள்
உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர
உம்மையல்ல

உங்கள் ஆன்மாவோடுதான்
வாழ்கின்றோம் இன்றும்
துயில் கொள்ளும் தாயே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றென்றும் உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள், சகோதரி, மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உறவினர்கள்...
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com