நினைவஞ்சலி

அமரர் சிவசம்பு சூரியகுமார்

தாய் மடியில் : 30, Mar 1972 — இறைவன் அடியில் : 14, Oct 2018வெளியிட்ட நாள் : 04, Oct 2019
பிறந்த இடம் - கிளிநொச்சி ஜெயந்திநகரை
வாழ்ந்த இடம் - செல்வாநகர், யாழ். நயினாதீவு
கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், செல்வாநகர், யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சூரியகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
உயிருக்கு மேலானவரே
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து போகின்றதய்யா
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை எம் மனதில்
நீர் எங்கு ஓடி மறைந்தீரோ!
ஓயாது உம் நினைவுகள் எம் மனதில்!
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது ஏனப்பா
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமகன்,
உற்றார், உறவினர்கள்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com