நினைவஞ்சலி

அமரர் வேலன் கிருஸ்ணன்

தாய் மடியில் : 08, Oct 1933 — இறைவன் அடியில் : 19, Oct 2019வெளியிட்ட நாள் : 14, Nov 2019
பிறந்த இடம் - யாழ். நித்தியவெட்டை
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். நித்தியவெட்டை முள்ளியானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதி 1ம் ஓழுங்கையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலன் கிருஸ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உங்களது அன்பாலும் அரவணைப்பாலும்
உங்களது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பாசத்தின் உறைவிடமாய் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் திகழ்ந்து எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பத் தலைவரின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று ஆத்மா சாந்தி கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கிருத்தியையும் இடம்பெறும் பின்னர் மதியபோசனம் நடைபெறும்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கி.அருணகிரிநாதன்
வி.நேசநாதன்
Mobile : +14169021758
Mobile : +41797257589
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com