நினைவஞ்சலி

அமரர் காஞ்சனா தேவகுமார்

தாய் மடியில் : 08, Oct 1975 — இறைவன் அடியில் : 04, Dec 2012வெளியிட்ட நாள் : 18, Nov 2019
பிறந்த இடம் - யாழ். இளவாலை மயிலங்கூடல்
வாழ்ந்த இடம் - இங்கிலாந்து
திதி: 18.11.2019 யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காஞ்சனா தேவகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
வாழ்ந்த தேசம் விட்டு
எம்மோடு வாழ வந்த தாயே
வந்தொரு வார்த்தை பேசாது
வானுறைந்து விட்டீர்களே
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே..
விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே
கடவுள் வந்து வரமொன்று கேட்டால்
கணேச மலர் எங்கள் அம்மாவை
திருப்பித்தா என்போமே.......
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரர்கள்
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன்
Mobile : +41764594025
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com