நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் (இராசநாயகம்)

தாய் மடியில் : 05, Apr 1935 — இறைவன் அடியில் : 26, Nov 2017வெளியிட்ட நாள் : 25, Nov 2019
பிறந்த இடம் - யாழ். கோவில் வீதீ
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். கோவில் வீதீயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்! உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்களின் ஆன்மா நித்திய சாந்திபெற
இறைவனை மன்றாடிப் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள்.
தகவல் குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com