நினைவஞ்சலி

திருமதி செல்வமணி விஜயகுமரகுரு (செல்வா, செல்வி)

தாய் மடியில் : 29, Oct 1956 — இறைவன் அடியில் : 31, Oct 2019வெளியிட்ட நாள் : 27, Nov 2019
பிறந்த இடம் - யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
எம் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புடன் அழகாக வாழ்ந்த உங்களை
ஈசன் அழைத்துச் சென்றானோ! மாறாத உங்கள் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே !
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உங்கள் நினைவுகளால்!!

அல்லும் பகலும் அயராது உழைத்து
நல்ல மனையாளாய் அன்புத் தாயாய் வாழ்ந்தாயம்மா!
பிறந்த இடம்சிறக்க புகுந்த இடம் செழிக்க வாழ்ந்தாயம்மா!
எத்துணை இடர்வரினும் அத்தனையும் மறந்து
அன்பாக பேசி ஆறுதலடையச் செய்தீரே! உள்ளம் உருகுதம்மா உம்பிரிவு தாங்காமல்
எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்
உம்மோடு வாழ்ந்த பசுமையான நினைவுகள்
என்றும் எம்மை விட்டகலாதம்மா
இறையடி இணைந்தே
இளைப்பாறுவீர்!!!
கடந்த 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்ப ஒளிவிளக்கு செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும், வேறு வகையிலும் ஆறுதல் கூறியும், அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டும் எம் ஆறாத்துயரில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Sri Raja Rajeswari Amman Temple, No:4 Dell Lane, Stoneleigh, EPSOM, KT17 2NE எனும் முகவரியில் நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நடைபெறவுள்ள அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் தயவுசெய்து இதனைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதி வருகை தருமாறு வேண்டுகின்றோம்.
தகவல்கணவர், பிள்ளைகள், மருமகன்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
Mobile : +442036320952
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com