நினைவஞ்சலி

அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

இறைவன் அடியில் : 14, Jun 2019வெளியிட்ட நாள் : 14, Jun 2020
பிறந்த இடம் - சில்லாலை
வாழ்ந்த இடம் - சில்லாலை
யாழ். சில்லாலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி யோசெப்பின் அமிர்தநாதர் ஆகியோரின் 1ம் ஆண்டு, 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழுத விழி ஈரம் காயவில்லை இன்னும்
ஆண்டொன்றும் ஈர்பத்தும் ஆனதுவோ அம்மா, அப்பா!
அம்மா, அப்பா உங்களை இழந்து ;
உங்கள் அன்பு நிறை வதனம் தேடித்தேடி அகிலமெல்லாம் அலைகின்றோம்
இங்கு எம்மை அரவணைக்க யாரும் இல்லை உங்களைப்போல்
இறைவனிடம் இருந்து வரம் வேண்டி எம் இதயத்தின் தேவைகளை நிறைவு செய்தவர்களே!
இன்னல்கள் எம் வாழ்வில் இடையூறு செய்தால் இனி யாரிடம் எம் துயர் உரைப்போம்
உங்கள் இனிய இதயத்தினை இனி எங்கே காண்போம் அம்மா, அப்பா? வாழ்க்கையில் வறட்சிகள் பல முறை வந்தபோதும், வாழ்ந்துதான் பார்ப்போமென்று இறைவனின்
இறை துணை நாடி,
வானளாவ வளர்ந்து வசந்தமான வாழ்வை உங்களாக்கிவர்களே
வரங்கள் பல பெற்று இவ்வுலக வாழ்வை நிறைவாக்கியவர்களே
வான் வீட்டில் அமருங்கள் அன்பு நிறை அண்ணனுடன், மைத்துனனுடன் அமைதியாக! கண்டிப்பும், கருணையும், அன்பும், அரவணைப்பும் கொண்ட தாயே, தந்தையே!
கண்ணியம் தவறாது கண்மணிகள் போல் வளர்த்தீர்களே எம்மை
கண்ணீர் மல்க காத்து நிற்கும் எமக்கு காவல் தெய்வங்களாய் கலங்கரை தீபங்களாய்
காலமெல்லாம் இருங்கள் என்றும் எம்மோடு எம் அன்புப் பெற்றோரே! மன்றாடுவோமாக
தாய் தந்தையை மதித்து நடக்க எங்களுக்குக் கட்டளையிட்ட இறைவா,
எங்கள் தாய் தந்தை மேரி யோசேப்பின், பெஞ்சமின் அமிர்தநாதர் இவர்கள் மீது கனிவுடன்
இரக்கம் கொண்டு
அவர்களுடைய நற்செயல்களை தயவுடன் கண்ணோக்கி
அவர்களுக்கு இரக்கம் காட்ட உம்மை வேண்டுகின்றோம்.
அதனால் என்றும் கன்னியான புனித மரியாளின் பரிந்துரையால்
உம் புனிதர் அனைவரோடும் முடிவில்லாப் பேற்றினில் அவர்கள்
பங்குபெறச் செய்வீராக!
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென். இவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா கண்ணாட்டியில் புதிதாக அமைக்கப்பெற்ற லூர்து கெபியில் பி.ப 04:30 மணிக்கும், 15-06-2020 மு.ப 06:00 யாழ் அருள் ஆச்சிரமத்திலும், மிருசுவில் செபமாலைதாசர் மாகாண இல்லத்திலும், சில்லாலை கதிரை மாதா ஆலயத்திலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
ஆழ்துயரில் அன்புச் சகோதரி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com