நினைவஞ்சலி

அமரர் ஜோசப் சவரிமுத்து

தாய் மடியில் : 18, Aug 1943 — இறைவன் அடியில் : 18, Jun 2019வெளியிட்ட நாள் : 18, Jun 2020
பிறந்த இடம் - மட்டக்களப்பு
வாழ்ந்த இடம் - மட்டக்களப்பு
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் சவரிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. களைத்திருந்தவரை கண்டார் ஆண்டவர்
களைப்பாற்றி மீண்டும் தொடராமல்
அள்ளி எடுத்தார் தேவன்
அவரின் கரங்களினால்
என்னுடன் வந்துவிடு என்றே.... யாரும் அறியா பெருவலி
ஆயினும் மடங்கா மனவலிமை
நித்தியம் வலியும் வலிமையும்
சந்தித்து ஓய்ந்தன ஒருநாளில்.... இருத்தலுக்கு இடைவிடா போராட்டம்
வீண்போகா ஒன்று அது
கண்ணீரில் கரைந்து கரைந்து
மெதுவாக தேய்ந்து முடிந்தது. நல்இதயம் நின்றுபோனது ஒருநாள்
ஓய்வேயில்லாத கரம் ஓய்வெடுத்தது
நித்தியமும் தேவனின் இல்லத்தில்
வலிஇல்லாப் பெருவாழ்வு வாய்த்ததே.... என்றும் எங்களின் நினைவிலும்
என்றும் எங்களின் பேச்சிலும்
என்றும் எங்களின் துடிப்பிலும்
வழிகாட்டியாக வாழுவீர்
நாம் மீண்டும் சேரும்வரை.... என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com