10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேலு இரத்தினம்

தாய் மடியில் : 26, Aug 1918 — இறைவன் அடியில் : 28, Jun 2010வெளியிட்ட நாள் : 28, Jun 2020
பிறந்த இடம் - புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - கலிஃபோர்னியா - அமெரிக்கா
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா கலிபோர்னியாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு இரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!

தகவல்: சிவானந்தன் குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com