நினைவஞ்சலி

அமரர் அம்பலவாணர் பராசக்தி

தாய் மடியில் : 16, Apr 1935 — இறைவன் அடியில் : 15, Jul 2019வெளியிட்ட நாள் : 01, Jul 2020
பிறந்த இடம் - சுருவில்
வாழ்ந்த இடம் - யாழ்ப்பாணம்
திதி: 03.07.2020 யாழ். ஊர்காவற்றுறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
வாழ்ந்து மடிதல் வழக்கேதான் ஆயிடினும் நாம்
வணங்குகின்ற தெய்வம்
மறைந்ததன்றோ ஆதலினால்
ஆண்டொன்று ஆகியும்
ஆறவில்லை எம் துயரம் அம்மா
பொறுமையின் பொக்கிஷமே
எங்கள் பெருமைகளின் பிறப்பிடமே
வறுமை சென்று விட்டதம்மா ஆனாலும் நீங்களின்றி
வெறுமை குடிகொண்டதம்மா
மறுமையென ஒன்றிருந்தால் எமக்கு மறுபடியும்
தாயாகமாட்டீரோ.....
சுருவிலுறை நாகம்மாள் உமக்கு
துணையிருக்க வேண்டுகிறோம்....
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com