நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரன் நகுலேஸ்வரி

தாய் மடியில் : 06, Nov 1948 — இறைவன் அடியில் : 22, Jun 2020வெளியிட்ட நாள் : 19, Jul 2020
பிறந்த இடம் - வல்வெட்டி
வாழ்ந்த இடம் - வல்வெட்டி
லாம். Post Tribute யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரன் நகுலேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அன்னார், மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், கிருஷாந்தி, சிந்துஷா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கணேஸ் மற்றும் இராஜேஸ்வரி, சறோஜினிதேவி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வச்சந்திரன், அசோக் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஹரிணிக்கா, சுவர்ணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
"அன்பின் அகராதியாய் அமைதியின் சிகரமாய்
என்றும் எம் வாழ்வில் இன்பங்களை அள்ளித்தந்து
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்ட எங்கள்
குடும்பத் தலைவி" திருமதி மகேஸ்வரன் நகுலேஸ்வரி(ராணி) அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து எம் இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களிற்கும், அனுதாபச் செய்திகளை அனுப்பியவர்களிற்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களிற்கும், மலர் மாலைகள் மலர் வளையங்கள் அனுப்பியவர்களிற்கும் மற்றும் சகல வழியிலும் எமக்கு உதவி செய்தவர்களிற்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com