நினைவஞ்சலி

அமரர் இராசா சிவலிங்கம்

தாய் மடியில் : 26, Feb 1947 — இறைவன் அடியில் : 19, Jul 2019வெளியிட்ட நாள் : 19, Jul 2020
பிறந்த இடம் - உரும்பிராய்
வாழ்ந்த இடம் - கரந்தன், கனடா
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கரந்தன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது குடும்பம் என்ற அரிய தெய்வீக பந்தத்துள்
எம் காவற் தெய்வமாக இருந்து
சதா குடும்பத்தின் மீது கண்ணும் கருத்துமாக,
உயரிய அன்பாக, சிறப்பான ஒரு உழைப்பாளியாக,
சுறுசுறுப்பாளனாக, திடகாத்திரம், நம்பிக்கை என்று
எது வேண்டுமோ அத்தனையும் நிறைந்து
காணப்பட்ட எம் தெய்வமே !
இத்தனை பாக்கியங்களும் நிறைந்திருந்தது
எம்மை ஏங்கவிட்டு விரைவில் பிரியவென்றா ?
என்று நினைத்து நினைத்து வருந்துகிறோம் !
கண்ணிலும் மேலாகப் போற்றி
வளர்த்த பிள்ளைகள், குறையறியாமல்
நேசித்த மனைவி, பிள்ளைகளை போல நேசித்த மருமக்கள்,
கடவுளாய் நேசித்த பேரப்பிள்ளைகள் மற்றும்
சுற்றம் மீளாத்துயரில் கலங்குகிறோம் !
என் செய்வோம் விதியை நோகிறோம் !
உங்கள் நினைவு என்றும்
பசுமரத்தாணிபோல் நாம்
வாழும்வரை எம்மோடிருக்கும் !
அதுவரை உங்களின் ஆத்மசாந்திக்காக
பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
உங்கள் நினைவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்…
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com