நினைவஞ்சலி

அமரர் புவிராஜசிங்கம் ஸ்ரிபன்

தாய் மடியில் : 07, Sep 1994 — இறைவன் அடியில் : 25, Jul 2013வெளியிட்ட நாள் : 23, Jul 2020
பிறந்த இடம் - பிரான்ஸ்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
பிரான்ஸ் Epinay sur seine ஜ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த புவிராஜசிங்கம் ஸ்ரிபன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டுகள் ஏழு ஆயினும் ஆறவில்லை
எம் சோகம்...! அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே? எங்கள் அன்புச் செல்வமே ஸ்ரிபன்...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்! கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ? சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே .கடல் அலை போல
உன் ஞாபகங்கள்
என்னை சுற்றுகிறது
உன் பயணம் முடிந்ததோ??நிலா இல்லாத வானமாய் போனதே
உன் பிரிவை தாங்காத என் நெஞ்சம்
இப்போது எங்கே போவேன்...கண்ணில் சிந்தும் கண்ணீர்
உன்னிடம் சொல்ல நினைப்பதை
சொல்லாமல் தவிக்கிறேன் தம்பி ஸ்ரிபன்!அக்கா அக்கா என்று கூப்பிட்ட நீ
இப்போது எங்கே?
உன்னை எங்கே தேடுவேன்??தனியாக தவிக்க விட்டு நீ பறந்து போனாய்
உன் சிரிப்பு சத்தம்
என் காதோரம் கேட்கவில்லைஉன் பேச்சு சத்தம் காணவில்லை
என்றென்றும் கேட்க முடியாமல் போய் விட்டியே???
என் உயிர் தம்பி நீ ஸ்ரிபன்
என் செல்ல தம்பியும் நீ ஸ்ரிபன்
இப்போது உன் மரணத்தை தாங்குவேனோ??என்றென்றும் உன்னை
நினைப்பேன் என் செல்ல தம்பி ஸ்ரிபன்
சொர்க்கத்தின் கதவுகள் உனக்காக
திறந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்
உன் அன்பு அக்கா மர்திகா...
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com