நினைவஞ்சலி

அமரர் லோஷனா விஜயகுமார்

தாய் மடியில் : 16, Nov 1967 — இறைவன் அடியில் : 28, Jul 2019வெளியிட்ட நாள் : 27, Jul 2020
பிறந்த இடம் - பருத்தியடை
வாழ்ந்த இடம் - பிரான்ஸ், பிரித்தானியா
யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோஷனா விஜயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சி
மையம் இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறது உன்
அன்பிற்கு ஈடாய்
என்ன இருக்குமென்று ....
மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனின் பாதத்தில் கண்ணீர் மலர்களை வைக்கின்றேன்.
தகவல்கணவர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com