நினைவஞ்சலி

அமரர் கந்தையா வேலாயுதம்

தாய் மடியில் : 12, Apr 1953 — இறைவன் அடியில் : 19, Aug 2019வெளியிட்ட நாள் : 02, Aug 2020
பிறந்த இடம் - கண்டாவளை
வாழ்ந்த இடம் - வரணி
கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலாயுதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆன போதும் துக்கம் குறையவில்லை அப்பா
தங்களின் இடைவெளியை யாராலும் நிரப்ப முடியவில்லை
தாங்கள் மகிழ்ந்திருந்த தருணங்களும் சிறிய நினைவுகளும்
கண்முன் காட்சிகளாய் விரிந்து மனது கனக்கிறது!
உங்களை அன்றாடம் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம்
பேரர்கள் எல்லோரும் உங்கள் நினைவுகளை மீட்க கோரி
ஆவலாய் வந்து எம்முடன் அமர்கின்றனர்
மானிட வாழ்வென்றால் நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன் சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்
எங்கள் குல தெய்வத்திற்கு பக்தியுடன் எம் இதய அஞ்சலிகள்...
உங்கள் ஆத்மா எங்களை ஆசிர்வதிக்குமாக...
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com