நினைவஞ்சலி

அமரர் வல்லிபுரம் மகேஸ்வரன்

தாய் மடியில் : 27, Jan 1935 — இறைவன் அடியில் : 06, Jul 2020வெளியிட்ட நாள் : 03, Aug 2020
பிறந்த இடம் - சாவகச்சேரி
வாழ்ந்த இடம் - மட்டக்களபு
லாம். Post Tribute யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேதவனம் திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
லவன்(பிரித்தானியா), லக்கி, சஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா, நாகேஸ்வரன் மற்றும் நாகமலர், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வினோதா(பிரித்தானியா), கிருபானந்தன், ராஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விலாஷ்(பிரித்தானியா), கிறிஷ்(பிரித்தானியா), பானுஜா, சைலஜா, அனுஷன், மேகவர்ஷினி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
"அன்பின் அகராதியாய் அமைதியின் சிகரமாய்
என்றும் எம் வாழ்வில் இன்பங்களை அள்ளித்தந்து
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்ட எங்கள்
குடும்பத் தலைவன்’’
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு எம் இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் தொடர்பு ஊடகங்கள் மூலம் அனுதாபங்களை தெரிவித்தோருக்கும் மற்றும் சகல வழியிலும் எமக்கு உதவி செய்தவர்களுக்கும் எமதுசிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் 31ம் நாள் வீட்டுக் கிருத்திய கிரியைகள் 05-08-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com