நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை உதயகுமார்

தாய் மடியில் : 24, Apr 1961 — இறைவன் அடியில் : 06, Sep 2010வெளியிட்ட நாள் : 18, Aug 2020
பிறந்த இடம் - புங்குடுதீவு 10 வட்டாரத்தை
வாழ்ந்த இடம் - சுவிஸ்
யாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூண் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் பறந்து சென்றாலும் எம்மை
கண்ணின் மணிபோல் காத்த காவல் தெய்வத்தை
என்றும் எம் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.
பாசமாய், நேசமாய், நினைவுமாய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்
எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்
எமது தெய்வத்தை எமது இதயக்
கோவிலில் வைத்துப் பூசித்து வணங்குகின்றோம்.
உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தி
பெற இறைவனின் பாதார
விந்தங்களைப் பணிகின்றோம்.
என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமகள்
தகவல்மனைவி, பிள்ளைகள், மருமகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com