கண்ணீர் அஞ்சலி

திரு சிவசம்பு சிவயோகம் (தவம்)

தாய் மடியில் : 11, Jul 1937 — இறைவன் அடியில் : 01, Sep 2020வெளியிட்ட நாள் : 06, Sep 2020
பிறந்த இடம் - காங்கேசன்துறை
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை, நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவயோகம் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி(Baba) அவர்களின் ஆருயிர்க் கணவரும், சிவநிரூபன்(அவுஸ்திரேலியா), சிவாஜினி(இங்கிலாந்து), பத்மநிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷியந்தி(அவுஸ்திரேலியா), முருகதாசன்(இங்கிலாந்து), தர்ஷனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாஸ்கரன், சிவராஜா(இங்கிலாந்து), சிவராணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சுமித்திரா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகர்ஷன், நிகிதன், அரிஸ், ஆதித், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com