நினைவஞ்சலி

திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி

தாய் மடியில் : 06, Dec 1937 — இறைவன் அடியில் : 08, Aug 2020வெளியிட்ட நாள் : 09, Sep 2020
பிறந்த இடம் - சாவகச்சேரி பெரியமாவடி
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் கிருஷ்ணசாமி அவர்களின் நன்றி நவிலல்.எமது குடும்பத் தலைவராகிய நமசிவாயம் கிருஷ்ணசாமி அவர்களின் மறைவின் போது ஆறுதல் அளித்தவர்கள், உதவி புரிந்தவர்கள் மற்றும் அன்பை வெளிப்படுத்திய யாவருக்கும் அவரின் குடும்பத்தினராகிய நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் தன்னைச் சுற்றி உங்களை போன்ற உற்ற நண்பர்களையும் உறவினர்களையும் கொண்டிருந்ததைப் பற்றிப் பெருமையடைகின்றோம்.இந்த இக்கட்டான நேரத்தில் எமக்கு உதவிய உங்கள் யாவருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். எமக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள், தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தவர்கள், மலர் வளையம் அனுப்பியவர்கள், மரணச் சடங்கிற்கான ஒழுங்கமைப்புக்கு உதவியவர்கள், எமக்கு உணவு கொடுத்து உதவியவர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்றே கூறலாம்.தற்போதைய சூழ்நிலை காரணமாக மிகுந்த சிரமங்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் நேரிலும் இணைய வாயிலாகவும் கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றோம்.எமது தந்தையுடனான உங்களின் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட போது நெகிழ்ந்து போனோம். தொலை பேசிக் செய்திகள், இரங்கல் செய்திகள், மின்னஞ்சல்கள், நீண்ட தொலை பேசி உரையாடல்கள் இவை யாவும் எமது தந்தையின் வாழ்வனுபவங்களையும் அவரின் மகிழ்வான தருணங்களையும் எமக்கு நினைவூட்டின.உங்கள் உதவிகள் அனைத்திற்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கப் பிரார்த்திக்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com