மரண அறிவித்தல்

திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி

தாய் மடியில் : 24, Dec 1951 — இறைவன் அடியில் : 14, Sep 2020வெளியிட்ட நாள் : 18, Sep 2020
பிறந்த இடம் - வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம் - கொக்குவில்
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயசுதா(கனடா), ஜெயசங்கர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி(சுவிஸ்), ராஜலட்ஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராசன்(இலங்கை), தங்கலட்ஷ்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலேஸ்வரன்(இலங்கை), சுபாஷினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(கனடா), வித்தியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சங்கவி, சம்பவி(இலங்கை), ஆகாஷ், அபினாஷ், இனியவள், ஈழவன்(ஜேர்மனி), வைஷ்ணவி, விசிஷாத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணைசாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com