நினைவஞ்சலி

அமரர் திருமதி செல்வமணி விஜயகுமரகுரு BA. (தங்கச்சி,செல்வா)

தாய் மடியில் : 29, Oct 1956 — இறைவன் அடியில் : 31, Oct 2019வெளியிட்ட நாள் : 17, Oct 2020
பிறந்த இடம் - வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் - திருகோணமலை, லண்டன்
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பூர்வீகமாகவும், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டொன்று போனபின்பும் அழுதவிழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவுனை அனுதினமும் நினைக்கின்றோம்
நீயிருந்த காலமெல்லாம் நிம்மதியாயிருந்தோமே
ஏனம்மா எமைப்பிரிந்தாய் ஏதிலிகளாய் ஏங்குகின்றோம்
பார்புகழ நாம் வாழ பாதைகளை வகுத்தவளே
காலமெல்லாம் நாம் வாழ கனவுகளைச் சுமந்தவளே
இயலாது என்ற போதும் அயராது உழைத்தவளே
வேரறுந்த விழுதுகள் நாம் விம்முவது கேட்கிறதா
தூரநோக்கு சிந்தனையால் துளிர்விட்டு வளர்த்தவளே
துணிவோடு முடிவெடுத்து தூணாக நின்றவளே- இன்று
துணையின்றித்தவிக்கின்றோம்..
யார் கண்தான் பட்டதுவோ காலனவன் கவர்ந்து கொண்டான்
உன் கனவெல்லாம் நனவாக்கி நின் காலடியில் சமர்ப்பிப்போம் உங்கள் ஆத்மா வீடுபேறடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், மருமகன், பேரன்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com