நினைவஞ்சலி

அமரர் சண்முகம் சாந்தலிங்கம்

தாய் மடியில் : 10, Aug 1948 — இறைவன் அடியில் : 03, Nov 2019வெளியிட்ட நாள் : 22, Oct 2020
பிறந்த இடம் - யாழ். கொட்டடி
வாழ்ந்த இடம் - நல்லூர்
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்பத்தின் முத்தே அப்பா
எம் இதயத்து திருவிளக்கே
முத்து சறுக்கியதோ மகுடமுடி சாய்ந்ததுவோ
எம் இதயம் உங்கள் நினைப்பில்
எண்ணெய் இல்லா திரி ஆச்சே
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாது எம் இதயம்
பாசம் காட்டிட இதயத்தின்
பக்கத்தில் அமர்ந்த அப்பாவே
நெஞ்சில் நம்பிக்கை எனும்
விதையை விதைத்த
முதல் கடவுள் அப்பாதான்
கண்ணில் கண்ணீர் வந்தாலும்
உங்கள் முகம் மறையவில்லை
என் வாழ்வின் இனியவரே
என் இதய உறவே
உங்களின் பிரிவு என்பது
யாராலும் திருடமுடியாத பொக்கிஷம்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
என்றும் உங்கள் நினைவாக வாழும்
குடும்பத்தினர்....
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com