மரண அறிவித்தல்

திருமதி தம்பிராசா கனகம்மா

தாய் மடியில் : 21, Apr 1933 — இறைவன் அடியில் : 22, Oct 2020வெளியிட்ட நாள் : 24, Oct 2020
பிறந்த இடம் - சிராம்பை அடி
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். சிராம்பை அடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா கனகம்மா அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி மீனாட்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா அவர்களின் ஆசை மனைவியும், ரஞ்சனா, லலிதா, சுசீலா, யமுனா ஆகியோரின் பாசமிகு அம்மாவும், சிவப்பிரகாசம், சரவணமுத்து, இரத்தினகுமார், காலஞ்சென்ற ஞானகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ரூபன், புஸ்பா, வனா, சசி, பாமதி, ராஜி, சிவசம்பு மணி, மனோரஞ்சிதம், சந்திரன், சுதா ஆகியோரின் பாசமிகு அத்தையும், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், சிவா பெனி, ஜெயந்தன் மலர், ஆனந்தராசா, சீதா, தாஸ், விஜயா இன்பம், சுமதி, குமார் மஸ்சி, கெனடி செல்வராணி ஆகியோரின் நட்பு ரீதியான ஆருயிர் அம்மாவும், செல்லா முசீன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியும், யஸ்ட்டின், தர்சன், லஜீதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சிந்துஜா, அனித்தா, அபிரா, பிரவீன், சுஜீந்திரா சசி, லக்சி, சங்கமி,பிரீத்திகா, அபிலாஸ், அனுஸ்கா, அபிநயா துசி, குரு, திலூக் துர்க்கா, தனீஸ், சுஜானா, யனீசா, விதூசா, வினோயஸ், இலக்கியா, அஞ்சலி ஆகியோரின் அம்மம்மாவும், வீரா, அருசுனா, அருவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனைவரும் Covid 19 கட்டுபாடுகளுக்கு அமைய வரவும் இறுதி அஞ்சலி செலுத்தும் நாள் மயானத்தில் எதுவித இட நெருக்கடிகளும் வராத படி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது அனைவரும் கலந்துகொள்ளமுடியும் வீன் வதந்திகளுக்கு தயவுகூர்ந்து செவி மடுக்க வேண்டாம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com