நினைவஞ்சலி

அமரர் சுஜித் வில்சன்

தாய் மடியில் : 07, Oct 2017 — இறைவன் அடியில் : 29, Oct 2019வெளியிட்ட நாள் : 25, Oct 2020
பிறந்த இடம் - Manapparai - India
வாழ்ந்த இடம் - Manapparai - India
தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜித் வில்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. சுஜித்...!!!...!! கருவறை இருட்டுபோல்
உள்ளே இருப்பாய் என்று நினைத்தோம்
கல்லறை இருட்டாய் மாறும் என்று
எண்ணவில்லை! எண்பத்தைந்து அடி ஆழத்தில் நாங்கள் கேட்ட
உன் மூச்சு சத்தம் தான் என்னும்
எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான்
உணவின்றி உறக்கமின்றி
இரவுபகலாய் இமைமூடாமல்
உன்னை நினைத்து இருந்தோம்
இப்படி எங்களை புலம்பி அழவிடுவாய் என்று
எண்ணவில்லை! சோளக் கொல்லையில்
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே மனதை நேற்றி கொள்கிறோம்- ஏன் என்றால்
இனி நீ கடவுளின் குழந்தை...
தகவல்RIPBOOK
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com