மரண அறிவித்தல்

திருமதி குணசிங்கம் ரெத்தினபூபதி

தாய் மடியில் : 10, May 1949 — இறைவன் அடியில் : 25, Oct 2020வெளியிட்ட நாள் : 26, Oct 2020
பிறந்த இடம் - மன்னார்
வாழ்ந்த இடம் - லண்டன்
மன்னார் கோவிற்குளம் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் ரெத்தினபூபதி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமார், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், செல்வமலர், இரத்தினகுமார்(வவா), தமிழ்செல்வி, கலைசெல்வி, கலையரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும், அமிர்தலிங்கம், கற்பகம், ராமநாதன், சிவகுருநாதன், சிவராசபூபதி, குருதேவி, ஜெகநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், லிங்கநாதன், கீர்த்தி, தவபாலசிங்கம், சிவனேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும், சிவபாக்கியம், வீரசிங்கம், அன்னலட்சுமி, ராசலட்சுமி, இளசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கயனிதி, ஜெனனி, மகிசா, அகிம்சா, Dr. சஜிந், சகானா, அஸ்வின், நர்மிதா, கிருஷன், றியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சாய்ரா, சியாரா, சீதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com