நினைவஞ்சலி

அமரர் கிருஸ்னி நடராஜா

தாய் மடியில் : 07, Jun 1997 — இறைவன் அடியில் : 27, Oct 2019வெளியிட்ட நாள் : 27, Oct 2020
பிறந்த இடம் - Edmonton - United kingdom
வாழ்ந்த இடம் - England - United kingdom
லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!! உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய் என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...தகவல்: குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com