நினைவஞ்சலி

அமரர் அப்பையா இரத்தினம்

தாய் மடியில் : 26, Mar 1941 — இறைவன் அடியில் : 09, Nov 2019வெளியிட்ட நாள் : 28, Oct 2020
பிறந்த இடம் - நல்லூர்
வாழ்ந்த இடம் - நல்லூர்
யாழ். நல்லூர் இல. 63/3 கொண்டலடி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்பையா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.காலங்கள் ஓராண்டு கடந்தது அம்மா,
எங்கள் கண்களில் இருந்து உங்கள்
திருமுகம் என்றும் மறையாது அம்மா,
காலம் எல்லாம் துணை இருப்பாய் என்று
எண்ணி இருந்தோம் அம்மா,
கனப்பொழுதில் கண்களை மூடிக்
கொண்டது ஏன் அம்மா,
கண்ணீர் மழை பொழிகிறோம் அம்மா,
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையோ அம்மா,
குணமடைந்து இல்லம் வருவாய் என்று
எண்ணி இருந்தோம் அம்மா,
உங்கள் பிரிவுத்துயர் கேட்டு எங்கள்
இதயம் ஒரு கணம் துடிக்க மறந்து
போனது ஏன் அம்மா,உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் பிள்ளைகள்
அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா..
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!!!
தகவல்பிள்ளைகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com