நினைவஞ்சலி

அமரர் திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி)

தாய் மடியில் : 15, Dec 1931 — இறைவன் அடியில் : 01, Dec 2019வெளியிட்ட நாள் : 31, Dec 2020
பிறந்த இடம் - மண்டைதீவு
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. அம்மா அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
அம்மா கடலளவு பாசத்தை வைத்து
உன் கண் பார்வைக்குள் எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்- இன்று
கண்ணீருடன் நினைவலையை தந்து
விட்டுச் சென்று ஆண்டு இரண்டு
ஆனதம்மா...
அம்மா உன் நேசம் தேடி
இன்னும் கனத்த இதயத்துடன்
உன் சாந்த முகத்தின்- புன்னகை
சாரலின் நினைவுகளுடன்..
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும் நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா பிரிவின் துயருடன் பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்!! அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 02-01-2021 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் 02ம் ஆண்டு நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com