நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரன் மதீஸ்வரன்

தாய் மடியில் : 31, Oct 1975 — இறைவன் அடியில் : 23, Jan 2020வெளியிட்ட நாள் : 09, Feb 2021
பிறந்த இடம் - நெல்லியடி
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
திதி: 10.02.2021 யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆர்ஜந்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அதிகாலை
அனலாய் வந்த செய்தி!
கனலாய் கனமாகிட
கனவாகிடாதோ?
என துடி துடித்தோம்! எங்கள் வீட்டு சோதியாய்
அயராது ஓடிய நதியாய்
உறவுகள் நெஞ்சில் பதியாய்
அநாதை முற்றத்து மதியாய்
காலன் தவறிய நீதியாய்
கலங்கி நின்ற சேதியாய்
எங்கள் உயிரில் பாதியாய்
எங்கள் இதயத்தில் ஆதியாய்
என்றும் நிறைந்திருப்பீர்கள்!!!
உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி கண்ணகை
அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com