நினைவஞ்சலி

அமரர் நாகேந்திரம் கந்தசாமி

தாய் மடியில் : 25, May 1955 — இறைவன் அடியில் : 21, Feb 2020வெளியிட்ட நாள் : 20, Feb 2021
பிறந்த இடம் - உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் - அமெரிக்கா
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாவும், ஐக்கிய அமெரிக்கா சியாட்டிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. இனி சூரியன் உதிக்காது எனும் நினைப்பு
வாழ்வையே இருட்டாகியது வீட்டுக்கு சூரியன்
குடும்பத்துக்கு ஆலமரம் நீ
நம்பிக்கையின் ஒளி விளக்கு
வாழ்க்கை எனும் பெரும் கடலில்
திக்குத்திசை தெரியாமல்
தவிக்கும் உங்கள் இழப்பு
சொல்லி மாளாது
அழுத்தும் தீராது பிள்ளைகள் என இரவும்
பகலும் பாராது ஓடி ஓடி உழைத்தாய்
மனைவி மக்கள் அமைதியான
ஆனந்தமான குடும்ப வாழ்வில்
படைத்தவன் கண் பட்டதோ
எல்லோர் நெஞ்சும் புண் பட்டதே
பட்டப்பகலில் இருள் சூழந்தது நினைக்காத கணமில்லை
கனகிறதே இதயம்
யாரை நொந்து அழுவது கண்ணுக்குள்ளே பிள்ளைகள் என்றவர்
ஒருநாளில் எல்லாம் இல்லாமல்
போகவே இதயம் கனக்கிறது
சொல்லி அழ வார்த்தைகள் இல்லை
வருடம் இன்று ஓடி மறைந்தது ஆனால்
காயம் வலிக்கிறது ரணமாக
சொன்னாலும் தீரவில்லை
நித்தம் அழுகின்றோம்
நிந்தன் நினைவாலே

பிரிவால் துயரும்
அன்பு மனைவி, பிள்ளைகள்
ரமா, காயத்ரி, பிரணவன்
ரமாவின் சகோதரர்கள்
திருச்செல்வம் குடும்பம்(சகோதரன்),
பாமா இதயகுமார் குடும்பம்(சகோதரி)
உமா மகேந்திரன் குடும்பம்(சகோதரி)நாகேந்திரம் கந்தசாமியின் சகோதரங்கள்

இராசலட்சுமி நடராசா குடும்பம்(சகோதரி), தங்கவேலாயுதம் குடும்பம்(சகோதரன்), பாலகிருஷ்ணா குடும்பம்(சகோதரர்), மல்லிகாமலர் நாகேந்திரம்(சகோதரி), மகேந்திரன் குடும்பம்(சகோதரன்), தெய்வேந்திரன் குடும்பம்(சகோதரர்), கமலாதேவி லோகேஸ்வரன் குடும்பம்(சகோதரி), சிவேந்திரன் குடும்பம்(சகோதரன்)
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com