மரண அறிவித்தல்

திரு தமியான் ஆபிரகாம்

தாய் மடியில் : 30, Oct 1930 — இறைவன் அடியில் : 21, Feb 2021வெளியிட்ட நாள் : 26, Feb 2021
பிறந்த இடம் - புலோப்பளை
வாழ்ந்த இடம் - ஜேர்மனி
யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், மாதகல் சகாயபுரம், எசன் ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தமியான் ஆபிரகாம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தமியான் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும், அருளம்மா(சறோசா), அருளானந்தம்(அன்ரன் - Yverdon, சுவிஸ்), யோசப்(ராஜன் - எசன், ஜேர்மனி), டொறத்தி(முன்னாள் ஆசிரியை யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி- சுவிஸ்), பெல்சியா யேசாந்தினி(பிரித்தானியா), மேரி புளோறன்ஸ்(எசன், ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், பெனடிற் ஜெகராசா(மாதகல்), யுவான் மேரி புஸ்பராணி(சுவிஸ்), ராசன்(குரூஸ்- லண்டன்), அன்ரன் விஜயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இருதயம், ஞானப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும், அடைக்கலம், இராயப்பு, சவிரிப்பிள்ளை, காலஞ்சென்ற மேரிப்பிள்ளை, அன்னம்மா, ஆரோக்கியம், லூர்த்தம்மா(சந்திரா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பிறின்சின்(நிசானி), பிரவித் ஸ்ரெபனி, பொயிற்ச்ஹறி, சுஜனி, றொசில், ரைரோன், கரோலினா, நிதுஷா, சஜித்தா, நிதுசன், டென்சி, டேணுகா, டெபோறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com