மரண அறிவித்தல்

தவமணிதேவி தங்கவேலாயுதம்

தாய் மடியில் : 04, Dec 1954 — இறைவன் அடியில் : 01, Jun 2021வெளியிட்ட நாள் : 01, Jul 2021
பிறந்த இடம் - யாழ். பொலிகண்டி
வாழ்ந்த இடம் - யாழ். பொலிகண்டி
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி தங்கவேலாயுதம் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிருஸ்னபிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன்(இலங்கை), தவரூபன்(சுவிஸ்), சரண்யா(பிரான்ஸ்), சோபியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கந்தசாமி(கொலண்ட்), பரராசசிங்கம், இறஞ்சினிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,

அனுசியா, சுலக்சனா, ஜெயகுமார், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குலவீரசிங்கம், செல்வறஞ்சிதம், சிவலிங்கம், மகேஸ்வரி, பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும்,

அபிசனா, மானுஜா, சாதுஜயன், றோஷனிகா, கனுஷ்னிகா, டர்சனா, டன்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்கி. கந்தசாமி(சகோதரர்)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com