மரண அறிவித்தல்

செசில் பாரதி அன்ரன் கிளரன்ஸ் மரியதாசன்

தாய் மடியில் : 15, Mar 1977 — இறைவன் அடியில் : 09, Jul 2021வெளியிட்ட நாள் : 09, Jul 2021
பிறந்த இடம் - யாழ். கரவெட்டி
வாழ்ந்த இடம் - லண்டன் Bromley
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செசில் பாரதி அன்ரன் கிளரன்ஸ் மரியதாசன் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அவுராம்பிள்ளை ஜோசப் (பொன்னுத்துரை) எலிசபேத் ஜோசப் (இராசமணி) தம்பதிகள், யாழ். கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையாபிள்ளை மத்தியாஸ்பிள்ளை றோசம்மா மத்தியாஸ்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஜோசப் ஜோர்ஜ் இராஜேந்திரம் (செல்வம்) மேரி ஸ்ரெலா புஷ்பராணி இராஜேந்திரம் தம்பதிகளின் இளைய புதல்வியும்,

பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற தேவதாசன் மரியதாசன், சூராவத்தையைச் சேர்ந்த இராணி மரியதாசன் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

அன்ரன் கிளரன்ஸ் மரியதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

மரியஸ், மரிசா, மனுவெலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருட்சகோதரி ஜோலண்ட் (Holy Family Convent- யாழ்ப்பாணம்) அவர்களின் பெறாமகளும்,

இராஜராஜன்(Paul Rajendram- BC, Victoria கனடா), செலின் தமயந்தி எடின்பரோ(Stuttgart ஜேர்மனி), பீற்றர் நரேந்திரன் இராஜேந்திரம்(கரவெட்டி, கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிரான் ஜோசப், கிளமன்ரா ஜோசப் (Damy- லண்டன், பிரித்தானியா), யூடிற் ராஜேந்திரம் (BC, Victoria, கனடா), அன்ரன் முத்துராஜா எடின்பரோ (விஜி- Stuttgart, ஜேர்மனி), டென்சில் மரியதாசன், அனிற்றா டென்சில் (Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜொனத்தன், ஜொவனிற்றா, ஜொவானா (லண்டன், பிரித்தானியா), அஞ்சலா சாருமதி (BC, Victoria, கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமாரா, தன்ஜா, வில்லியம் (Stuttgart, ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

டெல்வின், டெனிற்ரா, டாலியா (Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்கணவர், குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com