மரண அறிவித்தல்

சின்னையா மணிவண்ணன்

தாய் மடியில் : 24, Feb 1973 — இறைவன் அடியில் : 14, Jul 2021வெளியிட்ட நாள் : 14, Jul 2021
பிறந்த இடம் - யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடி
வாழ்ந்த இடம் - கொழும்பு தெஹிவளை
யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மணிவண்ணன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

இன்பமலர்(ஆசிரியை- யா/ வல்வை சிவகுரு), மதிவதனி(சுவிஸ்), சிவச்செல்வி(விரிவுரையாளர்- வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்பவியல் கல்லூரி, இரத்மலானை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகுமரபரன்(ஆசிரியர்- யா/ கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை), பகீரதன்(சுவிஸ்), உருத்திரன்(விரிவுரையாளர்- வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்பவியல் கல்லூரி), தாரணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிருத்திகா(HNB Head Office), செந்தூரன், நவீனன்(சுவிஸ்), மதீனன்(சுவிஸ்), சங்கவி, ஸ்ரீராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுவந்தி(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற கந்தசாமி, இராசமலர், ரூபசெளந்தரி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்லம், குலேந்திரராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொலிகண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com