மரண அறிவித்தல்

புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு

தாய் மடியில் : 29, Mar 1944 — இறைவன் அடியில் : 20, Jul 2021வெளியிட்ட நாள் : 20, Jul 2021
பிறந்த இடம் - யாழ். பொலிகண்டி
வாழ்ந்த இடம் - சுண்டிக்குளி
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாதகலை சேர்ந்த காலஞ்சென்ற சிங்காரவேலு(உதவி அரசாங்க அதிபர்- செட்டிகுளம், கரைதுறைப்பற்று மற்றும் தலைமைச் செயலக மேலதிக உதவி அரசாங்க அதிபர்- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. குமரவேள்(மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்- வடமாகாணம்), தாரணி(இங்கிலாந்து), காலஞ்சென்ற முருகவேள்(பேரெழிலன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலராசா(இங்கிலாந்து), துஷ்யந்தி(மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களம்) ஆகியோரின் மாமியும்,

கனிகை(இங்கிலாந்து), காலஞ்சென்ற எழுபரிதி, எழினி, பிரிதிகை(இங்கிலாந்து), வேளினி, வேணிலா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரியம்மா , நவரட்ணசாமி, இராஜலக்சுமியம்மா மற்றும் செல்வமாணிக்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பிகையம்மா, கண்டுமணி(இங்கிலாந்து), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

ரத்தினம் சண்முகம் தம்பதிகளின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com