மரண அறிவித்தல்

இலட்சுமிப்பிள்ளை நடராசா

தாய் மடியில் : 05, May 1937 — இறைவன் அடியில் : 26, Jul 2021வெளியிட்ட நாள் : 26, Jul 2021
பிறந்த இடம் - யாழ். தெல்லிப்பழை
வாழ்ந்த இடம் - விராங்கொடை ஞானவைரவ கோவிலடி
யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஸ்பராஜா, குணரத்தினம், புஸ்பமலர், பத்மராணி, கீதாராணி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி, கிருபானந்தம், சாந்தினி, சிவநேசன், உருத்திரன், உமா சங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மாணிக்கவாசகர், நாகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-07-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்இரவீந்திரதாசன் சாந்தினி
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com