மரண அறிவித்தல்

திரு.கந்தப்பு குமாரசாமி

தாய் மடியில் : 24, May 1926 — இறைவன் அடியில் : 29, Jul 2021வெளியிட்ட நாள் : 29, Jul 2021
பிறந்த இடம் - யாழ் அராலி
வாழ்ந்த இடம் - வெள்ளவத்தை
யாழ் அராலியைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தப்பு குமாரசாமி(ஓய்வு பெற்ற விவசாய திணைக்கள அதிகாரி) அவர்கள் 24-07-2021ம் திகதி சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அன்னலட்சுமியின் (அராலி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மலர்விழி ஞானசேகரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை, அராலி), இராசேந்திரன் (சிட்னி, அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரு. மாரிமுத்து ஞானசேகரம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), திருமதி குமுதினி இராசேந்திரன் (சிட்னி, அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தக்ஷினா,மகேஷ் ஆகியோரின் அப்பப்பாவும்,

காலஞ்சென்ற கந்தப்பு சுப்பிரமணியத்தின் (HNB) தம்பியும்,

திருமதி. நாகரட்ணம் கந்தையாவின் (தங்கம் அராலி/ கனடா) அன்பு அண்ணனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து சுப்பிரமணியம், டாக்டர் நாகலிங்கம் கந்தையா(ஓய்வு பெற்ற மருத்துவர்,அராலி,கனடா), திரு. நாகலிங்கம் கணபதிப்பிள்ளை (சிட்னி, அவுஸ்ரேலியா), டாக்டர் திருமதி. தவமணி கணபதிப்பிள்ளை (சிட்னி, அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-07-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்கு.இராசேந்திரன், திரு. சுந்தரசிவம், திருமதி. வதனி சுந்தரசிவம் திரு. லவன் சோமசேகரம்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com