மரண அறிவித்தல்

கந்தையா ஆறுமுகம்

தாய் மடியில் : 20, Sep 1927 — இறைவன் அடியில் : 05, Aug 2021வெளியிட்ட நாள் : 05, Aug 2021
பிறந்த இடம் - யாழ். இணுவிலை
வாழ்ந்த இடம் - கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திரபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, மாணிக்கம், செல்லையா, தம்பையா, பார்வதி, தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரரும்,

திருமகள், ஆறுமுகதாசன், சிவதாசன், அம்பிகை, அருந்ததி (அருணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணராஜன், மாலினி, சௌந்தரராஜன், குமுதினி, சுவேந்திரன் ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

சற்குணசிங்கம் (வேலாயுதபிள்ளை) - தவமலர், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை, ஆச்சியம்மா, சின்னத்தங்கச்சி, துரையப்பா, தங்கம்மா, பூபாலசிங்கம், பத்மாவதி, துரைவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபினி-சுஜிவன், விசாகன், கிறிஸ்ணி- அபர்நாத், மீரா, ஆரணி, ஜனனி, வாருஷா, மோகன், சாய்பிரியா, சாய்சிவன்யா, சேயோன், ஆதித்தன், அபிராம் ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com