மரண அறிவித்தல்

ஆழ்வார் சின்னத்துரை

தாய் மடியில் : 20, Jul 1942 — இறைவன் அடியில் : 03, Sep 2021வெளியிட்ட நாள் : 03, Sep 2021
பிறந்த இடம் - யாழ் அச்சுவேலி
வாழ்ந்த இடம் - யாழ் அச்சுவேலி
யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சின்னத்துரை அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று தன் வசிப்பிடமான அச்சுவேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற ஆழ்வார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னையா (மானிப்பாய் ) கனகம்மா அவர்களின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவனும்,

காலஞ்சென்ற இராசம்மா, காலஞ்சென்ற துரை, காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா (அச்சுவேலி) ஆகியோரின் பாசமான சகோதரரும்,

காலம்சென்ற மகாலிங்கம் (அச்சுவேலி), தவமணி (நவாலி), தர்மலிங்கம் (வவனிக்குளம்), இந்திரானி (கனடா), சாந்தலிங்கம் (ஜேர்மன்) கணேசலிங்கம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இவர் ஸ்ரீஸ்கந்தராஜா (நிக்சன் -மானிப்பாய் ), ஜெனோரி (ஜெனோ - அச்சுவேலி ), ஸ்ரீஸ்குமார் (பவன் -மானிப்பாய் ), ஸ்ரீஜம்சன் (ஜம்சன் - கனடா ) ஆகியோரின் அன்புத்தந்தையும் ,

வடிவேல் , சர்மிளா ,சுமதினி , துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,

வைக்சன், டிலக்சன், டினுயன், டிலான்சன், கேவின்சன், வர்கீசின், ஷஞ்ஜனா, தனிஷ்டா, கிரிஷனா அவர்களின் ஆசைத்தாத்தாவும் ஆவார் ,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 03.09.2021 அச்சுவேலி வல்லை இந்து மாயணத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்குடும்பத்தினர்,ஜம்சன் -மகன்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com