கண்ணீர் அஞ்சலி

அமரர் சத்தியவதனி ரவிச்சந்திரன்

தாய் மடியில் : 10, Mar 1978 — இறைவன் அடியில் : 03, Nov 2015வெளியிட்ட நாள் : 09, Nov 2015
பிறந்த இடம் - யாழ். நயினாதீவு
வாழ்ந்த இடம் - நோர்வே Oslo
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியவதனி ரவிச்சந்திரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

மரணத்துயரால் பெரிதும் வருந்தி,
எமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கண்ணின் மணியெனவே கருத்தால் ஒருமித்து
இன்புறவே இல்லறம்காத்து, இனியமக்களை பெற்று,
தன்னேரில்லா மகிழ்வுமிக வாழ்ந்து, தரணியில்
பலரும்போற்ற வீற்றிருந்த உம்மை நோய்வருத்தி
உயிர் பிரித்த பேரிழப்பால் பெரிதும் வருந்துகின்றோம்!

நேற்றிருந்தவர் இன்று இல்லை என்னும்
நிலையில்லாத தன்மை கொண்ட உலகிது,
என்று சாற்றி, ஓய்ந்திருக்கமுடியாத துயரமிகு சா இதுவாகும்!

தேற்றமுடியாத் துயரில் வருந்தும்
அன்னாரின் கணவர் அவர்களுக்கும்,
பாசமிகு பிள்ளைகளுக்கும்,
உற்றார், உறவினர்களுக்கும்,
எமது உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்து,

எம் பிரியமிகு சகோதரி சத்தியவதனியின்
நல்ஆத்மா சாந்தியுற வேண்டுகின்றோம்.
தகவல்கீத், வாணி
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com