கண்ணீர் அஞ்சலி

அமரர் விஜயரட்ணம் ஞானரஞ்சிதம் (தமிழ்க்கலை இசை ஆசிரியர்)

தாய் மடியில் : 31, Jul 1956 — இறைவன் அடியில் : 03, Dec 2015வெளியிட்ட நாள் : 07, Dec 2015
பிறந்த இடம் - யாழ். திருநெல்வேலி
வாழ்ந்த இடம் - சுவிஸ் Luzern
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஞானரஞ்சிதம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அமரர் ஞானரஞ்சிதம் விஜயரட்ணம் அவர்கள்,

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் இணைந்து தமிழ்க்கலை வளர்ச்சிக்கு அயராது உழைத்த தமிழ்க்கலை ஆசிரியர் அமரர் ஞானரஞ்சிதம் விஜயரட்ணம் அவர்கள் கடந்த 03.12.2015 அன்று சிவபதமடைந்துவிட்டார் என்பதனை அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம்.

ஆசிரியர் அமரர் ஞானரஞ்சிதம் விஜயரட்ணம் அவர்கள் வளரும் இளம் தலைமுறையினரின் தமிழ்க்கலை வளர்ச்சிக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அயராது பணியாற்றியவர். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டவர்.

தமிழ்க்கலை உலகிற்கு ஆசிரியர் ஆற்றிய சேவையினை நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்கின்றோம். ஆசிரியர் அமரர் ஞானரஞ்சிதம் விஜயரட்ணம் அவர்களை இழந்து துயரத்தில் துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

தமிழ்க்கலை ஆசிரியர் அமரர் ஞானரஞ்சிதம் விஜயரட்ணம் அவர்களுடைய இறுதிக் கிரியை எதிர்வரும் 09.12.2015 புதன்கிழமை அன்று லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெறவுள்ளதால் தமிழ்க்கலை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் திருவுடலானது 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை முதல் 08-12-2015 செவ்வாய்க்கிழமை வரை அனுதினமும் பி.ப 01:00 மணி முதல் பி.ப 08:00 மணி வரை Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 09-12-2015 புதன்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் 02:00 மணி வரை Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland என்னும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.
தகவல்அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

தொடர்புகளுக்கு

- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414402058
செல்லிடப்பேசி: +41789007315
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com